பிரபல நடிகருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை அந்த முடிவிற்காக தற்போது மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.
லிவ் இன் என்பது இப்போது சாதாரண காரியம் ஆகிவிட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை இயல்பாகிவிட்டது. மெட்ரோ சிட்டிகளில் பலர் இந்த வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் பிரபல நடிகர் ஒருவரும் சினிமா நடிகை ஒருவரும் காதலில் இருந்துள்ளனர். ஒரு படத்தில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்தனர். இந்த சினிமாவிற்கு பின் இவர்கள் இருவரும் நெருக்கம் அடைந்தனர். அதன்பின் பல இடங்களில் இவர்கள் ஒன்றாக சுற்ற தொடங்கி உள்ளனர்.
பல ஹோட்டல்கள் ரூம்களுக்கு இவர்கள் ஒன்றாக சுற்றிய புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகின. இவர்கள் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகின.
இவர்கள் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் கூட வைரலாகின. இந்த நிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன் இவர்கள் இருவரும் பிரிந்தனர். ஒன்றாக இருந்தவர்கள் மோதல் ஏற்பட்டு பிரிந்தனர். சில மாதங்களாக இவர்கள் பேசிக்கொள்வது இல்லை.
இந்த நிலையில் அந்த நடிகரால் தன்னுடைய எதிர்காலம் போய்விட்டதாக அவர் கருதுகிறாராம். அவருடன் தான் நெருக்கமாக இருக்கும் புகைபடங்கள் வெளியானதால் தனக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவும், அந்த ஹீரோ தனக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக அந்த நடிகை தனக்கு நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவரிடம் புலம்பி வருகிறாராம்.