சென்னை: பிரபல தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் நடிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் அந்த சேனலில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேறியதற்கு பின் பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் முக்கியமான ரோலில் அந்த பெண் நடித்து வந்தார். இன்ஸ்ட்டா பிரபலமான அவர், யூ டியூப் சேனல்களில் பல வீடியோக்களில் நடித்து பிரபலம் ஆனார். அதன் மூலம் இணையத்தில் டிரெண்டாகி பின்னர் தொலைக்காட்சிக்கு வந்தார்.
அந்த சீரியலில் அவரின் நடிப்பும் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுவதாக கூறப்பட்டது. இதற்கு அந்த சீரியல் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தில், அந்த பெண் நடிக்கும் ரோல் வில்லி ரோலாக மாறிவிட்டது. அவர் இத்தனை நாட்கள் நல்லவராக ரோலில் நடித்து வந்தார். இனி அந்த ரோல் கிடையாது என்பதால் அவர் வில்லி ரோலுக்கு மாறிவிட்டார்.
மற்றபடி அவருக்கும் தொலைக்காட்சிக்கு எந்த சண்டையும் இல்லை என்று விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் அவர் வெளியேறியதற்கு பின் பல முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி அந்த பெண்ணுக்கு சிலர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயன்று உள்ளனர். சீரியலில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றால், சில adjustment செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் அவரை சீரியலில் இருந்து இவர்கள் தூக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ALSO READ | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து திடீரென வெளியேறிய சாய் காயத்ரி.. என்னாச்சு?