அஜித்குமாரின் AK63 படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் துணிவு. பெரிய இடைவெளிக்கு பிறகு அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதால் படத்திற்கு ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், சிறிய ஓய்வுக்காக அஜித் யு.கே சென்றுள்ளார். அவருக்கு விருப்பமான பைக் பயணத்தில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
அதன்பிறகு அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 பட வேளைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே AK 63 படம் குறித்த அப்டேட் சமூகவலைதளங்களில் தீயார் பரவி வருகிறது. விஜயின் ஆதர்ச இயக்குநரான அட்லீ அஜித்துடன் கைகோர்கிறார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்பை அதிகப்படுத்தியுள்ளது. அதோடு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், இந்த படத்தை லைகா தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித்தின் சினிமா வாழ்க்கையில் AK63 மிக பிரம்மாண்டமான திரைப்படமாக அமையும் என கூறப்படுகிறது. தெறி, மெர்சல், பிகில் என விஜயுடன் வெற்றி படங்களை கொடுத்தவர் அட்லீ. அந்த வரிசையில் அஜித்துடன் இணைந்து பணியாற்றினால் வெற்றி படங்களை கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்