Tuesday, May 30, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்சத்தமே இல்லாமல் நடந்த ஏ.கே.62 பூஜை..? தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

சத்தமே இல்லாமல் நடந்த ஏ.கே.62 பூஜை..? தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக உலா வருபவர் அஜித்; பொங்கலுக்கு வெளியான இவரது துணிவு படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்னேஷ்சிவனுடன் ஏற்கனவே ஒப்பந்தமாகிய நிலையில் பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்ட நிலையில், புதிய இயக்குனர் யார் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகவில்லை.

மகிழ் திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது, லண்டனில் படத்திற்கான கதையையும் மகிழ் திருமேனி தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக ஏகே 62 படத்தின் பூஜை நேற்று மிகவும் எளிமையாக நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனிதான் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பே வெளியாகாத நிலையில் பூஜையை நடத்தி முடித்திருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இன்னும் சில நாட்களில் அதாவது மார்ச் வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது அஜித் வௌிநாட்டிற்கு தனது மனைவி ஷாலினியுடன் சென்றுள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு அஜித் விரைவில் சென்னை திரும்பியதும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பின்னர், படப்பிடிப்பை தீவிரமாக நடத்த திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் வரும் தீபாவளிக்கு படத்தை திரையரங்குகளில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
இதனால், இந்த தீபாவளி தல தீபாவளியாக இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.