தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இவர் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். எச்.வினோத் இயக்கிய இந்த படம் மாபெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக இருந்தது.
ஆனால், பல காரணங்களால் விக்னேஷ் சிவன் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. மகிழ் திருமேனி – அஜித் கூட்டணி பற்றி தயாரிப்பு நிறுவனமான லைகா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வெளியாகவே இல்லை.
ஆனால், லைகா தயாரிப்பு நிறுவனம் ரஜினிகாந்த் பட அறிவிப்பு, பொன்னியின் செல்வன் 2 அப்டேட் என்று மாறி, மாறி வழங்கி வருகிறது. இந்த சூழலில், கடந்த மாதம் நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியன் காலமானார். அஜித் படம் பற்றிய எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்த ரசிகர்களுக்கு அஜித்தின் தந்தை மறைவு மேலும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
வழக்கமாக மே 1-ந் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடுவதை காட்டிலும் தல பிறந்தநாளாகவே தமிழ்நாட்டில் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், மே 1-ந் தேதியாவது அஜித் 62 படத்தின் ஏதாவது அப்டேட் வருமா?என்ற பெருத்த சந்தேகங்கள் எழுந்துள்ளது. மகிழ் திருமேனி படத்தின் முதற்கட்ட பணிகளை தொடங்கிவிட்டார், மகிழ் திருமேனி படப்பிடிப்பை தொடங்கிவிட்டார், மகிழ் திருமேனி லண்டனில் திரைக்கதையை எழுதி வருகிறார் என்று வியூகங்களும், தகவல்களும் உலா வருகிறதே தவிர அதிகார்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இதனால், நடிகர் அஜித்தின் பிறந்தநாளன்று ஏகே 62 படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ALSO READ | என்னடா பண்ணி வச்சுருக்கீங்க..? இதுதான் வீரம் இந்தி ரீமேக்கா..? ட்ரெயிலருக்கே கதறும் ரசிகர்கள்..!