தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம். இவர் இன்று உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. அஜித் தனது தந்தை மற்றும் தாயுடன் அவ்வளவாக பொதுவெளியில் உலாவந்ததில்லை. அஜித்தின் தந்தையும் இதுவரை மிகப்பெரிய உச்சநட்சத்திரத்தின் தந்தை என்று பொதுவெளியில் ஒரு முறை காட்டிக்கொண்டதே இல்லை. இதனால், அவரை பற்றி அவ்வவளாக யாருக்கும் தெரியாது என்பதே உண்மை.
அஜித்தின் தந்தை மறைவு செய்தியறிந்த திரையுலகினரும், அவரது ரசிகர்களும் அஜித் குடும்பத்தினருக்கும், அவருக்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த சுப்பிரமணியத்தின் உடல் இன்று மாலை சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
அஜித்தின் தந்தை மறைவையொட்டி அஜித்தின் வீடு முன்பு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால் கூட்டம் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஜித் தந்தை மறைவிற்கு அஜித்தின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அஜித்திற்கு ஆறுதலும் கூறி வருகின்றனர். 84 வயதான சுப்பிரமணியம் கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். அவருக்கு மோகினி என்ற மனைவி உள்ளார்.இவர்களுக்கு அஜித் மட்டுமின்றி அனுப்குமார், அனில்குமர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.