சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய நிலையில் இன்னொரு பிரபலமும் இதில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக விஜே மணிமேகலை தெரிவித்துள்ளார். விஜே மணிமேகலை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விலகியதாக கூறப்பட்டது. நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் விலகியதாக கூறப்பட்டது.
முதல் இரண்டு சீசன்கள் காமெடி காரணமாக பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 சீசன்களாக காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. புதிதாக வந்த கோமாளிகளிலும் மோனிஷாவை தவிர வேறு கோமாளிகள் பெரிதாக சோபிக்கவில்லை. முக்கியமாக புகழ் செய்யும் காமெடிகள் பெரிதாக ஈர்க்கவில்லை.
அதோடு இந்த முறை பாலாவும் இல்லாத காரணத்தால் பெரிதாக நிகழ்ச்சி ஈடுபடவில்லை. பாலா தற்போது வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதால் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை.
இந்த நிலையில்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய நிலையில் இன்னொரு பிரபலமும் இதில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குரேஷி வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு வேறு படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பல படங்களில அவர் பிசியாக இருப்பதால் இந்த சீசனுக்கு முழுதாக வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் அவரும் இந்த நிகழ்ச்சிக்கு டாட்டா காட்டுவார் என்று கூறப்படுகிறது.
ALSO READ | பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து திடீரென வெளியேறிய சாய் காயத்ரி.. என்னாச்சு?