சென்னை: நடிகர் விஜய் தனது தாயாரின் முக்கியமான ஆசையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். லோகேஷ் யுனிவர்சில் இந்த படம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டு வருகிறது .
இந்த படமும் டிரக்ஸ் தொடர்பான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் நடிகர் விஜய் தனது தாயாரின் முக்கியமான ஆசையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
இவருக்கும் இவரின் பெற்றோருக்கும் கடந்த சில நாட்களாகவே நல்ல உறவு இல்லை என்று கூறப்பட்டது. இவர்கள் இருவரும் வெவேறு வீட்டில் இருக்கிறார்கள். அதோடு பெரிதாக இவர்கள் சந்தித்துக்கொள்வதும் இல்லை.
முக்கியமாக விஜய் தனது அப்பா சந்திரசேகரிடம் பேசிக்கொள்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. அப்பா மீது பல்வேறு காரணங்களுக்காக விஜய் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் விஜய் தனது தாயாரின் முக்கியமான ஆசையை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி ஷோபா லியோ படத்தில் நடிக்கட்டுமா என்று கேட்டுள்ளார். நான் அந்த படத்தில் நடிக்கட்டுமா.. உன்னுடைய படத்தில் உனக்கு அம்மாவாக நடிக்க எனக்கு ஆசை உள்ளது. அதனால் படத்தில் நடிக்கட்டுமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு விஜய் அது எல்லாம் வேண்டாமா.. உங்க கூட எல்லாம் நடிக்க முடியாது.. அப்படி நினைத்து கூட பார்க்காதீர்கள். நான் உங்களை பார்த்தால் நடிக்காமல் சிரிக்காமல் இருப்பேன், என்று கூறியதாக கூறப்படுகிறது.
ALSO READ | டாடா படத்தின் மாஸ் ஹிட்.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. ஆஹா இவ்வளவு வருமானமா?