Friday, September 17, 2021
Home சினிமா பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உயிரிழந்தார்

பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி உயிரிழந்தார்

சென்னை: பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

45 வயதான நடிகர் வடிவேலு பாலாஜி மாரடைப்பு காரணமாக கடந்த 15 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளான சிரிச்சா போச்சு, கலக்கப் போவது யாரு மற்றும் ஜோடி நம்பர் 1 போன்றவைகளில் வடிவேலு பாலாஜி தனது திறமையால் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வந்தார். இதுதவிர நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்திலும் வடிவேலு பாலாஜி நடித்திருந்தார். வடிவேலு பாணியை பின்பற்றி சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்டவர் வடிவேலு பாலாஜி. இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் திடீரென இவருக்கு மாரடைப்பு காரணமாக முடக்கு வாதம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தினால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பாலாஜி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரை பிரபலங்கள் பலரும் வடிவேல் பாலாஜியின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே வடிவேலு பாலாஜிக்கு சரியான நேரத்தில் பிரபலங்கள் யாரேனும் உதவியிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கொந்தளிக்க தொடங்கினர். மக்களை மகிழ்விக்க வைத்த ஒரு கலைஞனுக்கு இப்படிப்பட்ட நிலை ஏற்பட கூடாது, நிச்சயம் அவருக்கு அவர் பணியாற்றிய சேனலில் இருந்தோ அல்லது பிரபலங்கள் யாரேனுமோ உதவியிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

சிவகார்த்திகேயன்

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் மகன் ஸ்ரீகாந்த், மகள் சத்யஸ்ரீ ஆகியோரின் கல்விச் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக அவரது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். விஜய் டீவியின் அது இது எது நிகழ்ச்சியின் ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அப்போது சிரிச்ச போச்சு சுற்றில் வடிவேல் பாலாஜியின் காமெடி மிக பிரபலம். அப்போதிருந்து இருவருக்குள் நல்ல நட்பு உண்டு. வடிவேல் பாலாஜியின் மறைவு சிவகார்த்திகேயனை சோகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்தே நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisment -

Most Popular

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில்...

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய...

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம்...

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும்...

Recent Comments