Wednesday, May 31, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்மும்பையில் 2வது வீடு.. திடீரென வாங்கிய நடிகர் சூர்யா.. ஆஹா இத்தனை கோடியா?

மும்பையில் 2வது வீடு.. திடீரென வாங்கிய நடிகர் சூர்யா.. ஆஹா இத்தனை கோடியா?

சென்னை: நடிகர் சூர்யா மும்பையில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளாராம். மும்பையில் முக்கியமான ஏரியா ஒன்றில் இவர் இந்த வீட்டை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சூர்யா இப்போது பல்வேறு படங்களில் பிசியாக இருக்கிறார். வரிசையாக 2 முக்கியமான படங்களில் அவர் நடிக்க உள்ளார். முதல் பத்ம சிறுத்தை சிவா இயக்கும் படம். இது முடிந்த பின் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார்.

இதில் சிவா இயக்கும் படம் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக இருக்க போகிறது. 10 மொழிகளில் வெளிவர  இருக்கிறது. அதேபோல் 3டியில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு பின் நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கார, மணி ரத்னம், இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில்தான் நடிகர் சூர்யா மும்பையில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கியுள்ளாராம். இது அவர் மும்பையில் கடந்த ஒரு வருடத்தில் வாங்கும் இரண்டாவது பிளாட் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சூர்யா மும்பையில் ஒரு பிளாட் வாங்கினார். தற்போது அவர் மீண்டும் மும்பையில் இரண்டாவது பிளாட் வாங்கி உள்ளார்.

இந்த இரண்டாவது பிளாட்டின் விலை மட்டும் ரூ. 68 கோடி என்று கூறப்படுகிறது. இது மிகவும் பிரம்மாண்டமான வீடு ஆகும். இந்த பிளாட் 9,000 சதுர அடி வரை இந்த வீடு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் மிகப்பெரிய கார்டன் வசதியையும் இந்த வீடு கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

ALSO READ | ஆஹா இவரா? கவின் படத்தின் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா.. சிவா ரூட்டை பிடிக்கிறாரோ!