Tuesday, May 23, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்பிரசாந்த் செய்த தவறையே மோகன் செய்துவிட்டாரா..? பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு விட்டாரா?

பிரசாந்த் செய்த தவறையே மோகன் செய்துவிட்டாரா..? பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு விட்டாரா?

நமக்கு நினைவு தெரிந்து அன்றில் இருந்து இன்று வரை கதாநாயகர்களாக அதே ரசிகர்கள் பட்டாளத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ள நடிகர்கள் இரண்டே பேர். ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். மற்றொருவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்களுடன் நடித்த பல நடிகர்களும் இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர்.

ஆனால், ஒரு காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய போட்டியாக விளங்கியவர் நடிகர் மோகன். அப்போது கல்லூரி பெண்களின் கனவு நாயகனாக கார்த்திக்கும், மோகனுமே விளங்கினர். வெள்ளி விழா நாயகன் என்று கொண்டாடப்பட்ட மோகன் நடித்த அத்தனை படங்களும் 125 நாட்கள் ஓடின. அவர் மைக்குடன் இருப்பது போல படத்தின் போஸ்டர் வெளியானலே அந்த படம் மாபெரும் ஹிட்டடிக்கும் என்ற ராசியிருந்தது. அதனாலே அவரது பெயர் நாளடைவில் மைக் மோகன் என்றானது.

1979ம் ஆண்டு மூடுபனி மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மோகன் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை. கோபுரங்கள் சாய்வதில்லை அவரை தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு நன்று பரிச்சியப்படுத்தியது. காதல் நாயகனாகவே உலா வந்த மோகன் 24 மணி நேரம், விதி, நூறாவது நாள் போன்ற படங்களில் நடித்து தான் ஒரு வில்லங்கமான ஹீரோ அதாவது ஆன்டி-ஹீரோ என்றும் அசத்தியிருப்பார். இன்றும் அவரது உதயகீதம், இதயகோவில், மௌனராகம், மெல்லத்திறந்தது கதவு காதலர்களுக்கு அழகான காவியமாக உள்ளது.

மாபெரும் வெற்றி நாயகனாக உலா வந்த மோகனுக்கு அவரது படங்களுக்கு எல்லாம் மோகனுக்கு பதிலாக ரவீந்திரனே குரல் கொடுத்து வந்தார். ஆனால், அவரது குரலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன்பின்னர், தனது சொந்த குரலில் பேசி நடித்த மோகனை ரசிகர்கள் ஏற்கவில்லை.

இதனால், தமிழ் சினிமாவில் இருந்தே மறந்து போன மோகனுக்கு விஜய் நடிப்பில் வெளியான வாரிசில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், அவர் நடித்தால் ஹீரோதான் என்று மறுத்துவிட்டார். இன்றைய காலத்தில் ஹீரோக்களை காட்டிலும் வலுவான கதாபாத்திரம் நடிப்பவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மாஸ் வரவேற்பு உள்ளது. அதற்கு உதாரணம் அரவிந்த்சுவாமியின் கம்பேக்கான சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம். அந்த வாய்ப்பு முதலில் டாப் ஸ்டார் பிரசாந்திற்கு போனது. ஆனால், அவர் மறுக்கவே அரவிந்த் சுவாமிக்கு போனது. அவர் மட்டும் அந்த படத்தில் நடித்திருந்தால் விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்த அவர் மீண்டும் அந்த இடத்தை இன்று பிடித்திருக்க வாய்ப்பு உள்ளது.

அவர் செய்த அதே தவறைத்தான் மோகன் செய்துவிட்டாரா? என்ற எண்ணமும் தற்போது ஏற்பட்டுள்ளது. மோகன் நடிப்பில் தமிழில் உருவாகி வரும் ஹரா என்ற படத்தின் டீசர் வெளியா பிறகு வேறு எந்த அப்டேட்டும் இல்லை என்பதால், ஒரு காலத்தில் மோகனை ரசித்தவர்கள் அவர் விஜய் படம் மூலமாக கம்பேக் அளித்திருக்கலாமோ என்று கவலைப்படுகின்றனர்.

ALSO READ | அஜித்தை இயக்கும் மகிழ் திருமேனி..! நிச்சயம் ரசிகர்களுக்கு விருந்துதான்..! ஏன்?