Monday, May 29, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்டாடா படத்தின் மாஸ் ஹிட்.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. ஆஹா இவ்வளவு வருமானமா?

டாடா படத்தின் மாஸ் ஹிட்.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. ஆஹா இவ்வளவு வருமானமா?

சென்னை: தான் மூன்றாவதாக நடிக்கும் படித்திற்கு நடிகர் கவின் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் ஹீரோயின் யார் என்பது தொடர்பான விவரங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்தது . அதன்படி நடன இயக்குனர் சதீஷ் இயக்கும் புதிய கதையில் இவர் நடிக்க உள்ளாராம். அதில் ப்ரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக வெளியே இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது.

இந்த நிலையில்தான் கவின் நடிக்கும் இந்த படத்தின் சம்பளம் குறித்தும் விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த படத்தில் 1 கோடிக்கும் கீழ் இவர் சம்பளம் வாங்கி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்திற்கு அவர் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

கவின் நடித்த டாடா படம் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியானது. தற்போது இந்த படம் ஓடிடியிலும் வெளியானது. இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்கிறது. பாக்ய ராஜ், அபர்ணா தாஸ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்.

தியேட்டரில் இந்த படம் பெரிய வரவேப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் பாராட்டி இருந்தனர். முக்கியமாக கவின் நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இந்த நிலையில்தான் ஓடிடியில் இந்த படம் பெரிய ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவரின் இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஹிட் ஆகி உள்ளது.  முக்கியமாக டாடா குறித்து  தனுஷ், கார்த்தி என பல பிரபலங்கள் படம் பாராட்டி தள்ளி இருந்தனர். இவரின் முந்தைய படமான லிப்ட் படமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

ALSO READ | ஆஹா இவரா? கவின் படத்தின் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா.. சிவா ரூட்டை பிடிக்கிறாரோ!