Monday, March 27, 2023
HomeசினிமாHeroinesபுதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்

சென்னை: ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்து மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.

தமிழ் மட்டுமின்றி இதர மொழிகளில் அதிகளவு கமர்ஷியல் படங்களில் நடித்த போதும் ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் வென்றார்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெப் தொடர் ஒன்றைத் தயாரிக்க கீர்த்தி சுரேஷ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வெப் தொடரின் கதையைக் கேட்டதும் அவருக்குப் பிடித்துவிட்டதால், அதை தானே தயாரிக்க முடிவு செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. வெப் தொடரில் அவரே நடிப்பாரா என்பது பின்னர் தான் தெரியவரும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.