Tuesday, March 28, 2023
Homeசினிமாவெளியானது கார்த்தி நடிக்கும் 'சுல்தான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

வெளியானது கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கார்த்தி மற்றும் ரஷ்மிகா மந்தனா இனைந்து நடிக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இந்த படத்தை இயக்கி வருகிறார் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

கார்த்தி நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதன் பிறகு ஜோதிகாவுடன் இனைந்து தம்பி எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இதனை தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சுல்தான். இந்நிலையில் கையில் சாட்டையுடன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தளத்தில் இன்று வெளியானது.

நடிகர் கார்த்தி, மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.