Saturday, March 25, 2023
Homeசினிமாஏழு மாதங்களுக்கு பின் படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்

ஏழு மாதங்களுக்கு பின் படப்பிடிப்பில் கங்கனா ரனாவத்

திரையுலகில் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் சமீப காலங்களில் அதிக சரச்ச்கைளில் சிக்கி வருகிறார். நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பின் இவர் முன்னணி பாலிவுட் நடிகர்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் தலைவி திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக கங்கனா ரனாவத் தெரிவித்து இருக்கிறார். இந்த படத்தில் இவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்குகிறார். கடந்த ஆண்டு துவங்கிய இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முதற்கட்டமாக சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. பின் கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்சமயம் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக படப்பிடிப்பு மீண்டும் துவங்கி இருக்கிறது. தலைவி திரைப்படத்திற்கென நடன பயிற்சியில் கங்கனா ரனாவத் கலந்து கொண்டதாக தெரிவித்தார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், பூர்னா, மது உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.