Tuesday, March 28, 2023
Homeசினிமாமுதலில் மிரட்டல் பின் சரண்டர் - கங்கனாவை துரத்தும் தொடர் சர்ச்சை

முதலில் மிரட்டல் பின் சரண்டர் – கங்கனாவை துரத்தும் தொடர் சர்ச்சை

சர்ச்சைக்கு பெயர்பெற்ற நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒடிசாவை சேர்ந்த வழக்கறிஞர் கற்பழிப்பு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மிரட்டலுக்கு கங்கனா இதுவரை பதில் அளிக்கவில்லை.

நவராத்திரியை முன்னிட்டு, தான் விரதத்தில் இருப்பதாக கூறும் பேஸ்புக் பதிவை மேற்கொண்டார். இந்த பதிவில் வழக்கறிஞர் மிரட்டல் பாணியில் சர்ச்சை கருத்தை கமெண்ட்டாக பதிவிட்டார்.

பின் மிரட்டல் கமெண்ட் செய்த வழக்கறிஞர், ‘எனது பேஸ்புக் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு, தவறான தகவல் பதிவிடப்பட்டது. அவை எந்த ஒரு பெண் அல்லது சமூகம் பற்றிய என் கருத்துக்கள் இல்லை. அந்த கமெண்ட் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். அதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் காயமுற்றவர்கள் என் மன்னிப்பை ஏற்று கொள்ள வேண்டுகிறேன்’ என பதிவிட்டு தனது பேஸ்புக் அக்கவுண்ட்டை அழித்துவிட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரம், பின் பாலிவுட் திரையுலகம் பற்றிய கருத்து என பல்வேறு விவகாரங்களில் கங்கனா ரனாவத் தொடர் சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறார். முன்னதாக நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவேறு சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டியதாக மும்பை போலீசார் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சண்டல் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.