தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான சமந்தா சமூக வலைத்தளம் மூலம் தனது ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர், இதற்கு முன்பு நடித்த கதை சாயலில் மீண்டும் நடிக்க கூடாது என்ற விஷயத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு போரடித்து விடும். கொரோனாவில் எல்லோரும் கஷ்டத்தில் இருக்கிறோம். இந்த கஷ்டகாலம் விரைவில் முடிவுக்கு வந்து அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
Also Read: புதிய அவதாரம் எடுக்கும் கீர்த்தி சுரேஷ்
கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் குடும்பத்தோடு அதிக நேரம் ஒதுக்க முடிந்தது. கொரோனாவால் எனது எண்ணம், தோரணை முற்றிலும் மாறிவிட்டது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இனிமேல் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விஷயங்களுக்கு மட்டும் கஷ்டப்பட வேண்டும் என முடிவு செய்து விட்டேன்.
வாழ்க்கை மேன்மையாக இருக்க உணவு கட்டுப்பாடு, யோகா, தியானம் போன்ற செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். தினசரி வாழ்க்கையை திட்டமிட்டு நடத்த நம்மை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். என கூறினார்