உலகம் முழுவதும் வசூலை வாரிக்குவித்த கே.ஜி.எப். இந்த படத்தில் மிகவும் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ரவீணா டாண்டன். நாட்டின் பிரதமராக இவர் அற்புதமாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில், ரவீணா டாண்டன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பாலிவுட்டில் தனது பயணங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
தற்போது 50 வயதாகியுள்ள ரவீணா 1991ம் ஆண்டு பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ பாலிவுட்டிலேயே அதிக நிபந்தனைகள் விதித்து நடித்த நடிகை நானாக மட்டுமே இருப்பேன். திரைப்படங்களில் பலாத்கார காட்சிகளில் நடிக்க வேண்டுமென்றால் எனது ஆடை ஒரு இடத்தில் கூட கிழியவோ, விலகவோ கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிடுவேன். இதனால், பாலிவுட்டில் என்னை மிகவும் திமிர் பிடித்தவள் என்றுகூட கூறினார்கள்.
நான் இதுவரை பிகினி உடையில் நடித்ததில்லை. கண்டிப்பாக பிகினியுடன் நடிக்க வேண்டுமென்றால் நான் நடிக்க முடியாது என்று கூறிவிடுவேன். நான் நடித்த தர் என்ற படத்தில் என் ஆடையின் பின்புறம் உள்ள ஜிப்பை நாயகன் கழட்டும்போது எனது உள்ளாடையின் ஸ்ட்ராப் தெரியும். அந்த காட்சியில் நடித்ததே எனக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. பின்னர். அதுபோன்ற காட்சிகளையும் தவிர்த்துவிட்டேன்.
எனது தொடையழகை பலரும் வர்ணிப்பார்கள். அது எனக்கு சுத்தமாக பிடிக்காது. கதாநாயகர்களுடன் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என்றும் சொல்லிவிடுவேன். பல படங்களில் நான் நடிக்க முடியாமல் போனதற்கு என்னுடைய நிபந்தனைகளும் ஒரு காரணம். திரைப்படங்களில் நடிக்க வந்துவிட்டு இவ்வளவு பண்ணியிருக்கிறோமோ. இதெல்லாம் மிகவும் ஓவராக இருக்கிறதே என்று இப்போது நினைத்து சிரிக்கிறேன்.”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
பிரபல இயக்குனர் ரவி டாண்டனின் மகள்தான் ரவீணா டாண்டன். இவர் சல்மான்கான்,ஷாரூக்கான், அமிதாப்பச்சன் ஆகியோருடன் நடித்துள்ளார். தமிழில் அர்ஜூன் நடித்த சாது படத்தில் நாயகியாக அறிமுகமானார். ஆளவந்தானில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். கே.ஜி.எப். படத்தில் ராஷ்மிகா கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.