சென்னை: நடிகை குஷ்பு தான் பாலியல் ரீதியாக அப்பா மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளதாக கூறி உள்ளார்.
நடிகை குஷ்பு தற்போது தீவிர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். தேசிய அரசியலிலும் தீவிரமாக இவர் கவனம் செலுத்தி வருகிறார்.
திமுகவில் தீவிர உறுப்பினராக இருந்தவர் அதன்பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். திமுகவில் இவருக்கு பதவி கிடைக்கவில்லை. தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரசில் செய்தி தொடர்பாளராக இருந்தார்.
ஆனால் அங்கும் இவருக்கு பதவி கிடைக்கவில்லை. இதையடுத்து தான் கடுமையாக எதிர்த்த பாஜகவில் உறுப்பினராக இணைந்தார். ஆனால் பாஜகவில் இவருக்கு பெரிதாக பதவிகள் கொடுக்கப்படவில்லை. தற்போது இவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இவரை தேர்தல் அரசியலில் ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான ஏற்பாடு இது என்று கருதப்படுகிறது. இந்த நிலையில்தான் நடிகை குஷ்பு தான் பாலியல் ரீதியாக அப்பா மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளதாக கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள பேட்டியில், எனக்கு 8 வயது இருக்கும் போதே என் அப்பா என்னை பாலியல் ரீதியாக தொல்லை செய்தார். நான் அப்போதெல்லாம் கதறி அழுவேன். அப்போது எனக்கு இதை எதிர்க்கும் சக்தி இல்லை. அதன்பின் 16 வயதில்தான் நான் இதை எதிர்க்கும் துணிவை பெற்றேன்.
என் அப்பாவை எதிர்த்தவுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அதோடு நாங்கள் நடுத்தெருவுக்கு வந்தோம். எங்களுக்கு சாப்பிட கூட காசு இல்லை, என்று உருக்கமாக கூறி உள்ளார்.
ALSO READ | அவரோட “லிவ் இன்” இருந்தேன்.. அதுக்கு அப்பறம் எதிர்காலமே போச்சு.. புலம்பும் 2 எழுத்து நடிகை