இந்திய திரையுலகில் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் எப்போதும் பாராட்டுகளை பெறக்கூடியவர், படம் வெற்றி, தோல்வியாக அமைந்தாலும் இவரது நடிப்பை மட்டும் விமர்சிக்க முடியாது எனும் அளவிற்கு நடிப்பு அரக்கன் விக்ரம்.
தமிழ் சினிமாவில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக நடிப்பில் மிரட்டியவர். விஜய், அஜித் போலவே விக்ரமும் முன்னணி நடிகராக இருந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஏதும் மாபெரும் வெற்றி பெறவில்லை. அவரும் அவரது மகன் துருவ் விக்ரம் படங்களில் கவனம் செலுத்தினார்.
துருவநட்சத்திரம்
அந்தியன் போன்று அவர் ஒரு பிளாக்பஸ்டர் அளித்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். ஆனால், இந்தாண்டு நிச்சயம் விக்ரமின் ஆண்டாகத்தான் அமையப்போகிறது. விக்ரம் நடிப்பில் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் மிகவும் ஸ்டைலிஷாக உருவாகியுள்ள திரைப்படம் துருவநட்சத்திரம். தமிழ் சினிமாவே காத்துக் கொண்டிருக்கும் உளவு அதிகாரிகள் திரைப்படம் என்றே சொல்லாம். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் உள்ள இந்த படம் நடப்பாண்டில் ரிலீசாக உள்ளது.
தங்கலான்
தமிழ் திரையுலகின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். அவரது இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். மிகவும் வித்தியாசமான அன்றைய காலகட்டத்தில் நடைபெறுவது போல உருவாகியுள்ள இந்த படம் விக்ரமின் நடிப்புத் தீனிக்கு மிகப்பெரிய வேட்டை என்றே கூறலாம். இந்த படமும் இந்தாண்டு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே விக்ரமின் கெட்டப், படத்தின் காட்சிகள் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
பொன்னியின் செல்வன் 2
மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. கடந்த பாகத்தில் விக்ரம் உயிரிழந்தது போல காட்டினாலும் எதிர்வரும் பாகத்தில் அவருக்கான காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இதனால், பொன்னியின் செல்வன் 2ம் பாகம் மாபெரும் வரவேற்பு பெறும் படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
லோகி யுனிவர்ஸ்
ஹாலிவுட்டின் மார்வெல் உலகத்தை போல தமிழ் சினிமாவில் லோகி யுனிவர்ஸ் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுவும் விக்ரம் படத்தில் கைதி படத்தை இணைத்ததும், கிளைமேக்சில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா வந்ததும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அவர்களது எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைப்பதற்கு லியோவாக விஜய் களமிறங்குகிறார். இந்த படமும் விக்ரமின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த லோகி யுனிவர்சில் விக்ரமும் உள்ளே வரப்போகிறார் என்பதுதான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியான விஷயம், விக்ரம் படத்தில் சூர்யா வந்தது போல லியோ படத்தில் விக்ரம் இடம்பிடிக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.