Thursday, June 1, 2023
Homeசினிமாகோடை விடுமுறையை குறிவைக்கும் பேய் படங்கள்..! சாதித்து காட்டுமா சந்திரமுகி 2?

கோடை விடுமுறையை குறிவைக்கும் பேய் படங்கள்..! சாதித்து காட்டுமா சந்திரமுகி 2?

தமிழ் சினிமாவிற்கு எப்போதுமே கலெக்ஷனை வாரி வழங்குவது தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் ஆகும். அதேசமயம். மேற்கண்ட பண்டிகை நாட்கள் அளவிற்கு வரிசையாக வசூலை வாரிக்குவிக்கும் காலம் கோடை விடுமுறை காலம் ஆகும்.
அந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் விடுமுறையில் இருக்கும் என்பதால் முக்கிய திரைப்படங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த போட்டியிடும்.

தற்போது முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித். விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களின் படங்கள் பண்டிகை காலங்களை குறிவைத்தே களமிறங்குகின்றன.
இதனால், கோடை விடுமுறையில் அவர்களுக்கு அடுத்தகட்டத்தில் இருக்கும் நடிகர்களின் படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே கோடை காலத்தில் தமிழ் சினிமா பெரும்பாலும் திரில்லர், பேய் படங்களின் வெளியீட்டையே அதிகம் பார்த்துள்ளது. குழந்தைகள் உள்பட குடும்பங்களுடன் சென்று நகைச்சுவையாகவும், திரில்லராகவும் பார்க்கவும் இதுமாதிரியான பேய் படங்களுக்கு வரவேற்பும் கிடைத்து வருகிறது.

கடந்த காலங்களில் இதுபோன்ற கோடை விடுமுறை தொடங்கும் நேரத்திலும், கோடை விடுமுறையிலும் வெளியான படங்களின் வெற்றியை வைத்தே இதை நாம் அறியலாம். ராகவா லாரன்சின் காஞ்சனா சீரிஸ் படங்கள் கோடை விடுமுறையில் வெளியாகி வசூலை குவித்ததே இதற்கு நல்ல சான்றாகும். தற்போது பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பும் முழு அளவில் முடிந்துள்ளது.

படத்தின் வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து தமிழ்நாடு முழுவதும் வசூலை கலக்கிய சந்திரமுகி படத்தின் 2வது பாகமாக இந்த படம் வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். மேலும், இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிப்பதும் மேலும் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்த கோடை விடுமுறைக்கு விருந்தாக சந்திரமுகி 2 ரிலீசாகுமா? என்றும், வசூலை குவிக்குமா? என்றும் இப்போதே ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ALSO READ | பழைய சூப்பர்ஸ்டார் வருவாரா..? மீண்டும் ரஜினிகாந்தை உச்சத்திற்கு கொண்டு செல்வாரா ஜெய்பீம் இயக்குனர்?