Saturday, March 25, 2023
HomeசினிமாHeroinesதலைவிக்காக 20 கிலோ உடல் எடையை அதிகரித்த கங்கனா.. இதனால் நடந்த விபரீதம்!

தலைவிக்காக 20 கிலோ உடல் எடையை அதிகரித்த கங்கனா.. இதனால் நடந்த விபரீதம்!

கங்கனா ரனாவத் தலைவி படத்தில் தனது உடல் எடையை 20 கிலோ வரை அதிகரித்து பின் மீண்டும் எடையை குறைத்தார். இந்த படத்தில் கங்கணா ரனாவத் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் கங்கனா ரனாவத் தனது புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். மேலும் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்த தான் அனைத்து முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்திய திரையில் நான் முதல் சூப்பர்ஹியுமன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எனது உடல்வாகு காரணமாகவே இது சாத்தியமானது. என்னுடைய 30களில் நான் தலைவி படத்திற்காக 20 கிலோ வரை உடல் எடையை அதிகரித்து பரதம் ஆடினேன். இதனால் என இடுப்பு பகுதி பாதிக்கப்பட்டது. என அவர் தெரிவித்து இருக்கிறார்.

உடல் எடை முழுமையாக குறையவில்லை. மேலும் ஐந்து கிலோ வரை குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். உடல் எடையை குறைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏழு மாதங்களில் அருமையாக உணர்ந்த போதும், முந்தைய ஸ்டாமினா இன்னும் கிடைக்கவில்லை.

இன்னும் ஐந்து கிலோ குறைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இந்த அனுபவம் என் நம்பிக்கையை சீர்குலைக்கிறது. எனினும், இயக்குனர் விஜய் படத்தின் காட்சிகளை காண்பிக்கிறார். அவற்றை பார்க்கும் போது எல்லாம் சரியாக இருக்கிறது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதையம்சத்தில் தலைவி படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்குகிறார், திரைக்கதையை கேவி விஜயேந்திர பிரசாத் எழுதி உள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், மது மற்றும் பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.