சென்னை: இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் நடிகர் யார் என்பது தொடர்பான செய்திகள் வெளியாகி உள்ளன.
இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தமிழில் வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்தவர். ரமணா, தினா போன்ற இவரின் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்கள் ஆகும். அதேபோல் 7ம் அறிவு படமும் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
அதன்பின் விஜயை வைத்து இவர் துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களை கொடுத்தார். அதன்பின் இவர் இயக்கிய சர்க்கார், ஸ்பைடர், ஆகிய படங்கள் தோல்வி அடைந்தன. அதற்கு அடுத்து வந்த தர்பார் படமும் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில்தான் ஏஆர் முருகதாஸ் தற்போது மார்கெட் இன்றி தவித்து வருகிறார். இவருடன் படங்கள் நடிக்க பெரிய நடிகர்கள் முன்வருவது இல்லை. விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு பதிலாக ஏஆர் முருகதாஸ் எடுக்க வேண்டிய படத்தில்தான் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது.
ஆனால் கடைசியில் அந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. இதையடுத்து ஏஆர் முருகதாஸ் பெரிய படம் எதுவும் இன்றி இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது சிவகார்த்திகேயன் உடன் ஏஆர் முருகதாஸ் படம் எடுக்க உள்ளார். அனிருத் இசையில், பான் இந்தியா படமாக இந்த படம் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பாலிவுட் நடிகர் ஒருவர் இதில் வில்லனாக நடிக்க போவதாக கூறப்படுகிறது.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வரும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள். விஜய் நோ சொன்ன அந்த படத்தில்தான் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்கிறார்கள்