மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான த்ரிஷ்யம் படத்தில் நடித்த எஸ்தர் அனில் மிகவும் பிரபல குழுந்தை நட்சத்திரமாக மாறினார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான எஸ்தர் அனில் தனது சமீபத்திய போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படங்கள் மட்டுமின்றி போட்டோஷூட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் பகிரந்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறியப்படும் எஸ்தர் அனில், புதிய படங்களில் அழகு தேவதையாக காட்சியளிக்கிறார். இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
த்ரிஷ்யம் மூலம் அறிமுகமான எஸ்தர் அனில், அதன் தமிழ் பதிப்பான பாபநாசம் படத்திலும் கமல் ஹாசனின் மகளாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.