மலையாள திரையுலகில் 2013 ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் அங்கு மாபெரும் வெற்றி பெற்றது. பின் த்ரிஷயம் திரைப்படம் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளிலும் வசூல் வேட்டை நடத்தியது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 பெயரில் உருவாகிறது. மோகன்லால் நடிக்க இருக்கும் இந்த படம் பற்றிய அறிவிப்பு மோகன்லாலின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து நடிகை மீனா த்ரிஷ்யம் 2 படத்தில் தானும் நடிப்பதாக அறிவித்தார்.
Also Read: த்ரிஷயம் பட குழந்தை நட்சத்திரமா இது? வைரலாகும் போட்டோஷூட் படங்கள்
மலையாள திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் த்ரிஷயம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. த்ரிஷயம் 2 பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Glad to share that we have started the #shooting of #Drishyam2 today. Here are some of the Pooja Pics.#Drishyam pic.twitter.com/GF5B5k4SpH
— Mohanlal (@Mohanlal) September 21, 2020
த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு இன்று துவங்கினாலும், செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் மோகன்லால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
த்ரிஷ்யம் தமிழ் பதிப்பான பாபநாசம் படத்தில் கமலின் அசத்தலான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தற்சமயம் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில், பாபநாசம் 2 ஆம் பாகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.