Saturday, March 25, 2023
HomeசினிமாHeroesசங்கீதாவை விவகாரத்து செய்து விட்டாரா விஜய்? இது என்ன தளபதிக்கு வந்த சோதனை!

சங்கீதாவை விவகாரத்து செய்து விட்டாரா விஜய்? இது என்ன தளபதிக்கு வந்த சோதனை!

கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய டாபிக் விஜய்தான். வாரிசு படத்திற்காக பேசப்படுகிறார்தானே? என்று நினைத்தால் அதுதான் இல்லை. தமிழ் திரையுலகின் எவர்கிரீன் தம்பதிகள் பட்டியலில் விஜய் – சங்கீதா எப்போதுமே ரசிகர்களுக்கு பிரியமானவர்கள்.

இந்த நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதாவை விவகாரத்து செய்துவிட்டார் என்று வெளியான தகவல் கோலிவுட் வட்டாரம் மட்டுமின்றி தமிழ் திரையுலக ரசிகர்களுக்கே பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதற்கு காரணமாக அமைந்தது சங்கீதா விஜய்யின் விக்கிபீடியா பக்கம்தான். அவரது விக்கிபீடியா பக்கத்தில் நடிகர் விஜய்யை அவர் விவகாரத்து செய்துவிட்டதாக பதிவாகியிருந்ததை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நடிகர் விஜய்யும் சமீபத்தில் நடைபெற்ற வாரிசு இசை வௌியீட்டு விழாவிற்கு சங்கீதாவை அழைத்து வரவில்லை. அதற்கு முன்பு நடைபெற்ற இயக்குனர் அட்லீயின் மனைவி வளைகாப்பு விழாவிற்கும் நடிகர் விஜய் மட்டுமே வந்திருந்தார். எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கும் மனைவியுடனே செல்லும் விஜய் சமீபநாட்களாக சங்கீதாவுடன் காணப்படாதது ரசிகர்களுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஆங்கில நாளிதழ் ஒன்று இதுதொடர்பாக விஜய் தரப்பில் விசாரித்ததில் இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று தெரியவந்தது. மேலும், சங்கீதா வெளிநாட்டில் விடுமுறைக்காக சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா நடிகர் விஜய்யை சந்திப்பதற்காக 1996ம் ஆண்டு சென்னை வந்திருந்தார். அப்போதுதான் இருவரும் முதன்முதலாக சந்தித்துக் கொண்டனர். பின்னர், நண்பர்களாக இருந்த இருவரும் 1999ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் – சங்கீதா ஜோடிக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா சாஷா ஆகிய மகனும், மகளும் உள்ளனர். அவர்களின் 24 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிந்ததாக வெளியான வதந்தியால் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். அது வதந்தி என்று தெரிந்த பின்னரே நிம்மதி மூச்சுவிட்டனர்.