Saturday, March 25, 2023
Homeசினிமாமாற்றி, மாற்றி பேசும் பிஸ்மி! அடி பலமோ.. காரணம் இதுதானா?

மாற்றி, மாற்றி பேசும் பிஸ்மி! அடி பலமோ.. காரணம் இதுதானா?

திரைப்பிரபலங்களை காட்டிலும் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்களும், திரைப்பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை பற்றியும், திரைப்படங்கள் உருவான விதம் பற்றி பேசுபவர்களும் மிகுந்த பிரபலமாக உள்ளனர். அந்த பட்டியலில் குறிப்பிடத்தக்கவர் பிஸ்மி. இவர் வலைப்பேச்சு யூ டியூப் மூலம் தமிழ் சினிமா பற்றிய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சிலர் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பேசியது ரஜினி ரசிகர்களை மிகுந்த கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. வாரிசு ஆடியோ லாஞ்சிற்கு பிறகு பிஸ்மி தன்னுடைய பேட்டிகளில் எல்லாம் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று கூறிக்கொண்டே வருகிறார். அது மட்டுமில்லாமல் ரஜினிதான் முன்னாள் சூப்பர்ஸ்டார் என்றும் கூறி வருகிறார்.

ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானது மட்டுமின்றி அஜித் ரசிகர்களின் கோபத்திற்கும் பிஸ்மி ஆளாகியுள்ளார். நடிகர் விஜய் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் என்றும் ஆனால் அஜித் மிகவும் குறைவாக அத்தி பூத்தாற் போல்தான் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அதோடு நடிகர் விஜய்யின் படங்கள்தான் அதிக வசூலை குவித்துள்ளது. அஜித் படங்கள் அந்த அளவுக்கு வசூலை கொடுத்ததில்லை. இதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என பிஸ்மி பேசியிருந்தார். பிஸ்மியின் இந்த பேச்சு அஜித் ரசிகர்களையும் மிகுந்த கோபப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ரஜினி ரசிகர்கள் பிஸ்மி அலுவலகத்திற்குள் புகுந்த ரஜினியை விமர்சித்த வீடியோவை நீக்க வேண்டும் என்று மிரட்டி தாக்கியதாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி ரசிகரான இயக்குனர் பிரவீன்காந்திக்கும், பிஸ்மிக்கும் இடையேயான வாக்குவாதம் வைரலானது.

இந்த நிலையில், தனது யூ டியூப் பக்கத்தில் சமீபத்தில் பேசியுள்ள பிஸ்மி, அவர்களை பொறுத்தவரை கண்ணியமாக நடந்து கொண்டார்கள், உள்ளே வரும்போதே வரலாமா சார் என கேட்டு விட்டுதான் வந்தார்கள். ஹேப்பி நியூ இயர் என்று சொல்லிவிட்டுதான் வந்தார்கள், நாமும் நாற்காலி போட்டுதான் உட்கார வைத்தோம். வதந்திகளை நம்பி நீங்கள் எதுவும் நினைச்சுக்காதீங்க என மக்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர் என்று பேசியுள்ளார்.

பிஸ்மி திடீரென இப்படி மாற்றி பேசியிருப்பதற்கு என்ன காரணம் என்றும், இதன் பின்னணி என்ன என்றும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது. வாழ்த்து சொல்ல வந்தவர்கள் செம்மயா? வாழ்த்து சொல்லிவிட்டு சென்று விட்டார்களா? என்று சிலர் கலாய்த்து வருகின்றனர். இன்னும் சிலர் அடி பலமோ..? என்று கலாய்த்து வருகின்றனர்.