சென்னை: தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிக்பாஸ் தமிழ் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைசாக இருந்தது.
இதைத் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வுடன் கூடிய பிக்பாஸ் 4 புரமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த புரோமோவின் ஆரம்பத்தில் கமல் நடனம் ஆடியபடி வருவது அசத்தலாக இருந்தது.
இந்நிலையில், இந்த வீடியோவில் கமலுக்கு நடன இயக்குனராக இருந்தது சாண்டி என தெரிவந்துள்ளது. சாண்டி, கடந்த சீசனில் பிக் பாஸ் போட்டியாளராக இருந்தவர்.
பிக் பாஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாமிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதில் அவர் கூறுகையில்,
கமல்ஹாசன் சாருடன் இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி !!
சினிமா மீதான அவரது ஆழ்ந்த அறிவையும், அன்பையும் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்,
ஒரு உண்மையான உத்வேகம் தரும் நபர் சார் நீங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
பிக் பாஸ் செட்டில் கமல் ஹாசனுடன் சாண்டி இருக்கும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.