பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான அலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் சினிமா வட்டாரத்தில் அதிகம் விரும்பப்படும் காதல் ஜோடிகளாக உள்ளனர்.
இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் பழக்கம் ஏற்பட்டு இருந்தாலும், அலியா பட் சிறு வயது முதல் ரன்பீர் மீது ஈர்ப்பு கொண்டிருந்ததாக தெரிகிறது.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது 11 வயதில் பிளாக் திரைப்படத்திற்கான நேர்காணலின் போது ரன்பீரை பார்த்தேன். அப்போது முதல் அவர் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறேன்’ என தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக 2013 ஆம் ஆண்டின் பேட்டியிலும், அவர் உண்மையில் பாசம் கொண்டவர், இப்போதும் நான் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என அலியா பட் தெரிவித்து இருந்தார்.
இவரது விருப்பம் விரைவில் நிறைவேற வேண்டும்.