Saturday, March 25, 2023
Homeசினிமாபாலிவுட்டில் பல்பு வாங்கிய லாரன்ஸ்... லக்ஷ்மி பாம் படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட்டில் பல்பு வாங்கிய லாரன்ஸ்… லக்ஷ்மி பாம் படத்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

பாலிவுட்டில் லாரண்ஸ் இயக்கத்தில் உருவான லக்ஷ்மி பாம் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காரணத்தால், இதன் இந்தி ரீமேக்கிற்கு அறிவிப்பு வெளியானது முதல் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக அறியப்படும் அக்ஷய் குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். தமிழில் வெளியான காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக் தான் லக்ஷமி பாம் எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. நேரடி ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் லக்ஷமி பாம் திரைப்படத்தின் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

இதுவரை படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு வார்த்தையில் படம் படு மோசம் என பலரும் பதிவிட்டுள்ளனர். மேலும் சிலர் படம் தமிழில் இருந்த விறுவிறுப்பு இந்தி பதிப்பில் இல்லை என ஆதங்கத்தை தெரிவித்தனர்.

அக்ஷய் குமார் நடிப்பு வேற லெவலில் இருந்த போதும், படத்தின் திரைக்கதை வலுவாக இல்லை என்றும் படத்தில் காமெடி சின்க் ஆகவில்லை என தெரிவிக்கின்றனர். விமர்சனம், கருத்துக்கள் மட்டுமின்றி படம் பற்றிய மீம்ஸ் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.