சென்னை: நடிகையும், நடிகர் அஜித் குமாரின் மனைவியுமான ஷாலினி அஜித் குமார் பிரபல நடிகர் ஒருவரை திடீரென சந்தித்து உள்ளார். இவர்கள் கைகுலுக்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகின்றன,.
நடிகர் அஜித் குமார், நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் இயக்குனர் அ வினோத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான வெளியான படம் துணிவு. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதற்கு முன் வெளியான வலிமை படத்தை விட துணிவு படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.
250 கோடி ரூபாய்க்கும் அதிகமான கலெக்சனுடன் இந்த படம் ஹிட் அடித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படம் முடிந்ததும் நடிகர் அஜித் – ஷாலினி ஆகியோர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றனர்.
இவர்கள் போர்ச்சுகல் நாட்டிற்கு சுற்றுலா சென்றனர். இந்த நிலையில்தான் சென்னை திரும்பிய ஷாலினி நேற்று சென்னை கால்பந்து மைதானத்திற்கு சென்று ஐஎஸ்எல் போட்டிகளை பார்வையிட்டார். சென்னையின் எப்சி மேட்ச் நடக்கும் மைதானத்திற்கு சென்றார்.
தனது மகன் ஆத்விக் உடன் இந்த போட்டியை ஷாலினி கண்டுகளித்தனர். அப்போது சென்னையின் எப்சி நிறுவன உரிமையாளர் அபிஷேக் பச்சன் உடன் ஷாலினி சந்திப்பு நடத்தினார். இவர்கள் இருவரும் கைக்குலுக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆத்விக் அஜித் கால்பந்து மீது அதிக ஆர்வம் கொண்டவர் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ஷாலினி வந்ததாக கூறப்படுகிறது.
ALSO READ | விஜய் “நோ” சொன்ன கதை.. பிரபல ஹீரோவை வைத்து படம் எடுக்கும் ஏஆர் முருகதாஸ்.. யார் தெரியுமா?