அஜித், போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு படம் இன்று உலகெங்கும் ரிலீசாகியுள்ளது. வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அந்த படம் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும், எச்.வினோத் தனது முத்திரையை மீண்டும் பதிக்கும் வகையிலும் துணிவு படம் உருவாகியிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
படத்தில் அஜித்தின் வில்லத்தனமான சிரிப்பு, டான்ஸ், டைலாக் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பியது. எந்த நடிகர் திரைப்படம் வந்தாலும் முதல் காட்சியை கண்டுகளிக்கும் நடிகர் கூல் சுரேஷ் துணிவு படத்தின் முதல் காட்சியையும் நேரில் சென்று பார்த்தார்.
பின்னர், நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது, “படம் நல்லாருக்கு. என்னோட ஸ்டைல்ல சொல்லனும்னா, ‘வெந்து தணிந்தது காடு’ துணிவுக்கு வணக்கத்தை போடு. அஜித் சாருக்கு வணக்கத்தை போடு. அஜித் சார் மேல உள்ள அன்பால காலைலயே படம் பார்க்க வந்து இருக்கோம்.
துணிவு படத்துல ங்கொப்பன் மவனே டான்ஸ்ல செம்மைய பண்ணியிருக்காரு அஜித். அந்த மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் மிரட்டி விட்டாரு. இந்த மாதிரி படம் அவர் நெறைய பண்ணனும் என பேசியுள்ளார். கூல் சுரேஷ் பேசியுள்ள இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ‘துணிவு’ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.
துணிவு படம் என்பது வங்கிக்கொள்ளை திரைப்படமாக அமைந்துள்ளது என்றே கருதி வந்த நிலையில், வங்கிகள் கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிலோன் மூலம் மக்களிடம் இருந்து பணத்தை எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.