சென்னை: பிரபல தமிழ் நடிகை ஒருவர்.. கோலிவுட்டில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். இதற்காக தன்னுடைய “உயரமான” ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே அறிமுகம் ஆனவர் அந்த ஹீரோயின். பள்ளி படிக்கும் போதே சினிமாவிற்கு வந்தவர். அவர் நடித்த படங்களும் வரிசையாக ஹிட் அடித்தது.
இளம் வயதாகி இருந்தாலும் பார்க்க பெரிய பெண் போல இருப்பார். வந்த புதிதிலேயே பல பெரிய ஹீரோக்களுடன் நடிக்க தொடங்கினார். அவருக்கும் வாய்ப்புகள் கொட்டியது. அந்த மலையாள பைங்கிளி அதன்பின் திடீரென காணாமல் போனார்.
தனக்கு சிட்டி பாணி கதைதான் வேண்டும். உள்ளூர் கதை வேண்டாம். அடிக்கடி கிராமத்து படங்களில் நடிக்க கூப்பிடுகிறாரக்ள். அது எனக்கு செட்டாகாது என்று கூறினார். அதன்பின் பெரிதாக அவர் படங்களில் நடிக்கவில்லை. அபப்டியே கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
இந்த நிலையில்தான் சில நாட்களாக படிப்பின் மீது கவனம் செலுத்தியவர் மீண்டும் தற்போது நடிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இதற்காக தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறாராம். இந்தமுறை சிறப்பாக ரீ என்ட்ரி கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தனக்கு விருப்பமான நடிகர் “உயராமன” வி நடிகரிடம் ஆலோசனை கேட்டு வருகிறாராம். நான் ரீ என்ட்ரி தர போகிறேன். உங்களின் அடுத்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு சான்ஸ் கொடுங்கள். அல்லது வேறு ஹீரோவிடம் சான்ஸ் வாங்கி தாருங்கள் என்று சிபாரிசு கேட்டு இருக்கிறாராம். அந்த ஹீரோவிற்கு இவர் நெருக்கம் என்பதால் இவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.