Monday, May 29, 2023
Homeவர்த்தகம்டிகிரிதான் முடிச்சுருக்கீங்களா..? எந்த வேலைக்கு போறதுனு குழப்பமா இருக்கா..? டோண்ட் வொர்ரி..!

டிகிரிதான் முடிச்சுருக்கீங்களா..? எந்த வேலைக்கு போறதுனு குழப்பமா இருக்கா..? டோண்ட் வொர்ரி..!

நாட்டில் கல்வி வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இணைய வளர்ச்சி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அறிவு வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்போதும் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்களுக்கு தங்களது வேலைவாய்ப்புகள் பற்றிய மனக்கவலை என்பது இருந்து கொண்டே இருக்கிறது.

அதுவும் கிராமங்களில் இருந்து கல்லூரி படிப்பை முடித்துவிடும் இளைஞர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. அந்த வகையில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால், இளங்கலை பட்டம் பெற்றவர்கள், அவர்கள் சார்ந்த துறைகளில் உள்ள வேலைவாய்ப்பை கீழே காணலாம்.

• B.A. Economics:

நீங்கள் இளங்கலை பொருளாதார பட்டம் பெற்றவராக இருந்தால் நீங்கள் Operation Manager, Executive Assistant, Data Analyst போன்ற வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

• B.A. Economics with Computer Application:

இளங்கலை பொருளாதாரம் மட்டுமின்றி அத்துடன் கணினி பற்றிய அறிவும் இருந்தால் நீங்கள் Economist, Financial Service Manager, Economic Researcher, Customer Profit Analyst, Investment Analyst, Investment Administrator, Sales Analyst, Securities Analyst Trainee போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

• B.A. Economics with Logistics and Freight Management:

இளங்கலை பொருளாதாரத்துடன் சரக்கு வர்த்தக மேலாண்மை பட்டம் பெற்றவராக இருந்தால் நீங்கள் Investment Analyst, Investment Administrator, Sales Analyst, Securities Analyst Trainee, Economist, Financial Service Manager, Economic Researcher, Customer Profit Analyst போன்ற பணிகளில் சேரலாம்.

• BCA Computer Applications:

பி.சி.ஏ. படித்தவராக இருந்தால் கணினி சார்ந்த துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. அதாவது, Applications Developer, Computer Operator, Office Assistant-computer Operator, Computer Application Specialist %26 Accounts Assistant, Computer System Analyst, Lead Consultant-Application Development போன்ற பணிகளில் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

• B.A. English Language and Communication:

இளங்கலை ஆங்கிலம் பட்டம் பெற்றவராக இருந்தால் நீங்கள் Trainer-Communicative English, English Language Specialist, English Trainer போன்ற பணிகளில் சேரலாம்.

• B.A. English Literature:

இளங்கலை ஆங்கில இலக்கிய பட்டம் பெற்றவராக இருந்தால் நீங்கள் Translator, English Language Trainer, Copy Editor-English Literature, Subject Matter Expert-English Literature, English Content Writer, Spoken English Trainer ஆகிய பணிகளில் சேரலாம்.

• B.A. Geography:

ஜியோகிரபி எனப்படும் புவியியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவராக இருந்தால் Agricultural Specialists, Cartographers, Demographers, Forest Managers, GIS and Remote Sensing Specialists, Regional and Urban planner, Climatologist, Environment Manager, Transportation Manager போன்ற பணிகளில் சேரலாம்.

மேற்கண்ட படிப்புகளுக்கான பணிகள் தனியார் துறை மட்டுமின்றி அரசுத்துறையிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. சரியான நிறுவனங்களில் விண்ணப்பித்தால் நல்ல சம்பளத்துடன் வேலை பெறலாம்.

ALSO READ | ஐ.டி.துறையில் வேலை வேண்டுமா..? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!