Monday, May 29, 2023
Homeவர்த்தகம்ஐ.டி.துறையில் வேலை வேண்டுமா..? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

ஐ.டி.துறையில் வேலை வேண்டுமா..? இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க..!

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளதால் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறையில் ஏராளமான பணிகள் கொட்டிக்கிடக்கிறது. பல்வேறு சலுகைகளுடன் ஐ.டி. துறையில் வேலைவாய்ப்புகள் கொட்டி கிடப்பதால் இளைஞர்கள் பலரும் ஐ.டி.துறைக்கு முயற்சிக்கின்றனர்.

ஐ.டி. துறையில் வேலை தேடுபவர் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறமைகள் என்னென்ன?

  • நீங்கள் தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பு படிக்கவில்லை என்றால், தொழில்நுட்ப துறையில் உள்ளவர்களோடும், மாணவர்களோடும் ஒரு இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
  • இதன் மூலம் ஏற்கெனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரோடு உங்களுக்கு தொடர்பு ஏற்படலாம்.
  • இது உங்களுக்கு வேலை கிடைக்க உதவலாம். அதுமட்டுமல்லாமல் அந்த துறையில் உள்ள ஒருவரோடு உங்களுக்கு தொடர்பு இருப்பதால் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளலாம்.
  • நிறுவனங்கள் உங்களின் திறமையின் மீது நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறீர்கள் என்று பார்த்து தான் வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றன.
  • நம் மனதில் தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? என்பதை அறியும் வகையிலும் அவர்கள் கேள்விகள் கேட்பார்கள் என்பதால் நாம் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.
  •  இன்டர்ன்ஷிப் செல்வதன் மூலம் ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப அனுபவங்களையும், பணி அனுபவங்களையும் எளிதில் பெற முடியும்.
  • இன்டர்ன்ஷிப்க்கு செல்பவர்களை பெரும்பாலும் நிறுவனங்கள் வரவேற்கின்றன. ஏனெனில் நிறுவனங்கள் வேலையை கற்று கொடுத்து வேலை வாங்கலாம். ஆனால் அவர்களுக்கு குறைவான ஊதியத்தையே கொடுக்கும்.
  • நீங்கள் வேலையை நன்கு கற்றுக் கொண்டால், அந்நிறுவனம் நீங்கள் நன்றாக வேலை செய்யும் பட்சத்தில், உங்களை அங்கேயே வேலைக்கு எடுக்கலாம். அது உங்கள் கையில் தான் உள்ளது.
  • நீங்கள் கல்லூரி முடித்தவுடன் எந்த மாதிரியான நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதில் சிறிய குழப்பம் இருந்தால் நீங்கள் சரியான நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும்.
  • எனவே பெரிய பிரபலமான நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதை விட தொடக்க நிலையில் உள்ள நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • உங்களை நேர்காணல் செய்பவர்கள் அதிகபட்சமாக உங்கள் நடத்தையும், ஆளுமை திறனையுமே அறிய விரும்புவார்கள்.
  • நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் போது நீங்கள் நல்ல உடை அணிந்து செல்லுங்கள்.
  • நேர்காணலில் பலரும் தங்களது உடை மற்றும் நடத்தை காரணமாக நிராகரிக்கப்படுகிறார்கள்.
    மேலே கூறப்பட்டுள்ள தகுதிகளை வளர்த்துக்கொண்டால் உங்களுக்கு வேலைகள் மிக எளிதாக கிடைக்கும்.

ALSO READ | PF Withdrawal: ஆன்லைன் மூலமாக PF பணத்தை எப்படி எடுப்பது? கத்துக்கோங்க..!