Monday, March 27, 2023
Homeவர்த்தகம்சூப்பர் ஆப்: அமேசான், பிளிப்கார்ட்க்கு போட்டியாக களம் இறங்கும் டாடா!

சூப்பர் ஆப்: அமேசான், பிளிப்கார்ட்க்கு போட்டியாக களம் இறங்கும் டாடா!

இந்தியாவில் சூப்பர் ஆப் சந்தையில் களம் இறங்க டாடா குழுமம் முடிவு செய்துள்ளது. இது அமேசான், பேட்டியம், பிளிப்கார்ட் குழுமத்தின் போன்பே, ரிலையன்ஸ் ஜியோ ஆகியவைகளுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஆப் என்பது, ஷாப்பிங், பேமென்ட், கேப் முன்பதிவு, உணவு போன்ற எண்ணற்ற சேவைகளை கொண்ட ஆப் ஆகும். சுருக்கமாக சொல்லவேண்டும் எனில் பேட்டியம், போன்பே போன்ற ஆஃப்கள்.

இது குறித்து பத்திரிக்கை ஒன்றிக்கு பேட்டி அளித்த டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:

டாடாவின் புதிய சூப்பர் ஆப் பல பயன்பாட்டு சேவைகளை ஒரே இடத்தில் இணைக்கும் வகையில் இருக்கும். இதில் எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இந்த சூப்பர் ஆப் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவையை டாடா குழுமத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட டாடா டிஜிட்டல் நிறுவனத்தால் உருவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

டாடா ஸ்கை, டாடா ஸ்கை பிராட்பேண்ட், தனிஷ்க் ஜுவல்லரி போன்ற நுகர்வோர் சந்தையில் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது டாடா குழுமம்.

டாடா குழுமம் உணவு, மளிகை, பேஷன், நுகர்வோர் பொருட்கள், நிதி சேவைகள் மற்றும் காப்பீடு மற்றும் கல்வி, சுகாதாரம் மற்றும் பில் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே பயன்பாட்டிற்குள் உள்ளடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்திய ஆராய்ச்சியின்படி, இந்தியாவில் 620 மில்லியன் இணைய பயனர்களைக் கொண்டுள்ளன என்றும் 2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை சுமார் 850 மில்லியனாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.