Monday, March 27, 2023
Homeவர்த்தகம்ரூ. 2100 கோடி கொடுத்து கொலம்பியா ஆசியாவை விலைக்கு வாங்கும் மணிபால் குழுமம்

ரூ. 2100 கோடி கொடுத்து கொலம்பியா ஆசியாவை விலைக்கு வாங்கும் மணிபால் குழுமம்

பெங்களூரை சேர்ந்த மணிபால் மருத்துவமனை குழுமம் கொலம்பியா ஆசியா மருத்துவமனை குழுமத்தை வாங்க ஒப்பந்தமிட இருக்கிறது. இரு மருத்துவமனை நிர்வாகங்களுக்கு இடையில் கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் மதிப்பு பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.

எனினும், இதன் மதிப்பு ரூ. 2100 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவை சேர்ந்த மருத்துமவனை குழுமம் இந்தியாவில் இருந்து வெளியேற இருக்கிறது.

கொலம்பிய மருத்துவமனை குழுமத்திற்கு இந்தியா முழுக்க 17 நகரங்களில் 27 மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 10 ஆயிரம் ஊழியர்கள், 4 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இது இந்தியாவின் அப்பலோ மருத்துவமனை குழுமத்தை தொடர்ந்து இரண்டாவது பெரும் மருத்துவ குழுமமாக இருக்கிறது.

ஒப்பந்தம் நிறைவுற்றதும் கொலம்பிய ஆசியா மருத்துவமனை மணிபால் மருத்துவமனை என பெயர் மாற்றம் செய்யப்படும் என மணிபால் கல்வி மற்றும் மருத்துவ குழுமத்தில் தலைவர் டாக்டர் ரஞ்சன் பாய் தெரிவித்தார்.

தற்சமயம் மணிபால் மருத்துவமனை குழுமத்தில் மொத்தம் 15 மருத்துவமனைகள் நாடு முழுக்க இயங்கி வருகின்றன. இரு குழுமங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் வழிகாட்டு ஒப்புதல்களின் அனுமதி பெற்றே நிறைவுபெறும். கொலம்ரியா ஆசியா மருத்துவ குழும சொத்து மதிப்பு ரூ. 400 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டு இருக்கிறது.