இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் அத்தியாவசிய அடையாளமாக மாறி வருகிறது ஆதார் அட்டை. இப்போது, அரசாங்கத்தில் இருந்து நாம் பெற வேண்டிய அனைத்து பலன்களுக்கும் ஆதார் அட்டை கட்டாயமான ஒன்றாக மாறிவிட்டது.
அதேசமயம் ஆதார் எண்ணை வங்கி எண் உள்பட பலவற்றிலும் இணைத்திருப்பதால், வங்கி எண்ணைப் போல அதையும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.
இந்த நிலையில், நமது ஆதார் எண் எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?
- அரசின் அதிகாரப்பூர்வ ஆதார் இணையதளமான https://uidai.gov.in/ என்ற வலைதளத்திற்குள் செல்லவும்.
- என் ஆதார் என்பதற்கு கீழே உள்ள, ஆதார் சேவைகள் எனும் பட்டியலில் உள்ள, ‘ஆதார் அங்கீகார வரலாறு’ என்ன என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இந்த பக்கத்தில் லாகின் செய்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிட வேண்டும்.
- அங்கு கொடுக்கப்பட்ட CAPTCHA குறியீட்டை உள்ளிடவும்.
- இந்த பக்கத்தில் தற்போது திறக்கப்படும் “Generate OTP” பட்டனை தேர்வு செய்யவும்.
- தகவலின் காலம் மற்றும் முந்தைய பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைத் தேர்வு செய்ய வேண்டும்.
- ஆதார் எண்ணுடன் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். மூலம் ஒரு OTP பெறப்பட்டிருக்கும். அதை பதிவிடவும்.
ஆதார் அட்டை சம்பந்தமான அனைத்து தகவல்களும், தேதி, நேரம் மற்றும் ஆதார் அங்கீகாரக் கோரிக்கைகளின் வகை போன்ற விவரங்கள், நீங்கள் முன்பு தேர்ந்தெடுத்த காலப்பகுதியில் (அதிகபட்சமாக 50 பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படும்) தோன்றும்.
இதன்மூலம் நமது ஆதார் எங்கெங்கு பயன்படுத்தப்பட்டது என்பதை நாம் எளிதாக அறியமுடியும்.
ALSO READ | டெபிட் கார்டு மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி..? இதுதான் ஈசி வழி..!
ஆதாரின் தவறான பயன்பாடுகளைத் தவிர்க்க பின்வருவனவற்றை மனதில் வைக்க வேண்டும்.
ஆதார் OTPஐ யாருக்கும் பகிரக்கூடாது.மெய்நிகர் ஐடியைப் பயன்படுத்தி ஆதார் எண்களைக் கண்காணிக்க முடியாது. UIDAIஇல் உள்ள “ஆதார் அங்கீகார வரலாறு” பகுதியின் உதவியுடன் ஆதார் பயன்பாட்டு வரலாற்றை சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், UIDAIஇன் இணையதளத்தை அணுகுவதன் மூலம் உடனடியாக அதை தடுக்கலாம்.
ஆதார் பயன்பாட்டில் ஏதேனும் முரண்பாடுகள் தோன்றினால், 1947 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது hel[email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நமது ஆதார் எண் மூலம் என்னென்ன நடக்கிறது என்பதை மேற்கண்ட முறையில் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஏதேனும் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்தால் தொடர்புடைய அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.