இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் பணப்பரிவர்த்தனையானது தற்போது phone pay, g pay, pay tm மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு வர்த்தகம் மூலமாகவே பெரும்பாலும் நடக்கிறது. இணையவழி பணப்பரிவர்த்தனை காரணமாக ஏராளமான சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.
இப்போது, சமீபகாலமாக UPI மூலம் பல்வேறு நூதன திருட்டிலும், கொள்ளையிலும் பல கும்பல்கள் செயல்பட்டு வருகிறது.
- மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு அல்லது UPI கணக்கிற்கு பணத்தை அனுப்புகின்றனர்.
- பின் உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பி விட்டேன் என தெரிவிக்க உங்களை மொபைல் போனில் அழைக்கின்றனர். மேலும் பணத்தை அவர்களின் கணக்கிற்கு திருப்பி அனுப்புமாறு கேட்கின்றனர்.
- நீங்களும் பணத்தை திருப்பி அனுப்பினால், உங்கள் வங்கிக் கணக்கு Hack செய்யப்பட்டு கணக்கில் இருக்கும் முழு பணத்தையும் எடுத்து கொள்கின்றனர்.
- இதில் சில பேருக்கு link அனுப்பி இதனை கிளிக் செய்து பணம் அனுப்புங்கள் என்று கூறுகின்றனர்,
- எனவே, யாராவது உங்கள் கணக்கில் தவறாக பணம் அனுப்பி விட்டேன் என மொபைல் போனில் அழைத்தால், அடையாள அட்டையுடன் வீட்டின் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்து பணமாக பெற்று கொள்ளுங்கள் என கூறிவிடுங்கள்.
- மேலும் நடந்ததை காவல்துறையினரிடம் தெரிவித்து விடுங்கள்.
இந்த மாதிரி மோசடி இப்போதுதான் தொடங்கி உள்ளது. எனவே யாராவது உங்கள் கணக்கில் தவறுதலாக பணம் அனுப்பி விட்டேன் என கூறினால், உடனே நம்பிவிடாமல் எச்சரிக்கையாக இருங்கள். சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நமக்கே தெரியாமல் நூதன முறையில் கொள்ளையடிக்க பல கும்பல் முயற்சித்து வருகிறது. எனவே, எச்சரிக்கையாக இருங்கள்.
ALSO READ | பான் கார்ட் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்? கவனம் மக்களே