ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு 7.8% பங்குகளை வழங்க ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில் லிமிட்டெட் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது. இதற்கென ப்ளிப்கார்ட் நிறுவனம் ரூ. 1500 கோடி வழங்க இருக்கிறது.
முதலீட்டின் அங்கமாக ஆதித்யா பிர்லா நிறுவனம் சார்ந்து இயங்கும் பல்வேறு பிராண்டு பொருட்களை ப்ளிப்கார்ட் விற்பனை மற்றும் விநியோகம் செய்ய இருக்கிறது. நிறுவனத்தின் 7.8% பங்குகளை கொடுத்த பின், ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில் லிமிட்டெட் நிறுவனம் 55.13% பங்குகளை கொண்டிருக்கும்.
பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு வளர்ச்சியை அதிகப்படுத்த ஆதித்யா பிர்லா பேஷன் மற்றும் ரீடெயில் லிமிட்டெட் திட்டமிட்டு உள்ளது.
மேலும் தனது பிராண்டு பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும் என ஆதித்யா பிர்லா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.