படிப்பை முடித்த பிறகு கனவை நோக்கி பயணிக்கிறோமோ இல்லையோ, வேலைக்கு செல்ல வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். நமது வாழ்வாதாரத்திற்காகவும், நம் வாழ்வின் அடுத்த கட்ட இலக்கிற்காகவும், நமது புதிய பயணத்திற்காகவும் வேலை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
நமக்கு தேவையான, நமது விருப்பத்திற்கு ஏற்ப வேலைக்கு தயாராகும்போது நாம் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல்கள் நேர்காணல். அதாவது இன்டர்வியூ. ஏனென்றால், ஒவ்வொரு துறையும் வித்தியாசமாக இருந்தாலும், அனைத்து துறைகளுக்கும் பொதுவாக இந்த இன்டர்வியூ இருக்கிறது.
பலரும் இந்த இன்டர்வியூவில் கோட்டைவிட்டு விடுகின்றனர். அப்படிப்பட நேர்காணலை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதை கீழே காணலாம்.
- முதலில் உங்களுடைய சுயவிவரம் அதாவது ரிசம் தயார் செய்து கொள்ளவும்.
- இண்டர்வியூ நடக்கும் இடம் உங்களுக்கு அருகில் உள்ளதா? தொலைவில் உள்ளதா? என்பதை பற்றி அறிந்து கொள்ளவும்.
- இண்டர்வியூக்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும். ஏனென்றால் நேர்காணல் செய்யும் நபர்கள் உங்கள் நேர ஆளுமை திறனை சோதிப்பார்கள். நேரத்திற்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் குறித்தும் ஆலோசிப்பார்கள்.
- உங்கள் தன்னம்பிக்கை உங்கள் உடையில் தெரிய வேண்டும்.
- நேர்காணலுக்கு செல்லும்போது தன்னம்பிக்கையை தரும் உடையை அணிந்து கொள்ளுங்கள்.
- ஏனென்றால், உங்கள் உடையே உங்களை நேர்காணல் செய்பவர்களுக்கு உங்களின் திறனை வெளிக்காட்டும்.
- நேர்காணலுக்கு செல்லும்போது பதற்றத்தை குறைத்து தன்னம்பிக்கையுடன் இருங்கள். தன்னம்பிக்கையுடன் நீங்கள் நேர்காணலை எதிர்கொள்ளும்போது வெற்றி உங்கள் வசப்படும்.
- இண்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
- உங்களின் அறிமுக உரையாக இருக்கலாம். அதை சுருக்கமாக பேசி முடிக்க வேண்டும்.
- கல்வித் தகுதி குறித்த விவரங்களைத் தெரிவித்த பின், ஏற்கனவே பணி செய்த முன் அனுபவம் இருந்தால் அது பற்றித் தெளிவாகக் கூற வேண்டும்.
- நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் துறை சார்ந்த கேள்விகள் கேட்கப்படும். அதற்கு தயாராக செல்லுங்கள்.
- நீங்கள் சார்ந்த துறை மட்டுமின்றி நாட்டு நடப்புகள், அரசியல் நிலவரங்கள், பொது அறிவு பற்றியும் அறிந்து வைத்திருங்கள். அது எப்போதும் மிகவும் அவசியமானது.
- உங்களின் சுயவிவரங்கள் கேட்டது போல், அவர்களும் தங்களுடைய நிறுவனத்தை பற்றி கேட்பார்கள். இண்டர்வியூ-க்கு செல்லும் முன் அந்த நிறுவனத்தின் விவரங்களையும் அறிந்து கொண்டு செல்லுங்கள்.
மேலே கூறியவற்றை பின்பற்றி தன்னம்பிக்கையுடன் நேர்காணலை எதிர்கொண்டால் அந்த வேலை உங்களுக்கு உறுதியாக கிடைக்கும்.
ALSO READ | டிகிரிதான் முடிச்சுருக்கீங்களா..? எந்த வேலைக்கு போறதுனு குழப்பமா இருக்கா..? டோண்ட் வொர்ரி.