தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் பணப்பரிமாற்றமும் பல்வேறு வடிவங்களை எட்டியுள்ளது. அதேபோல, முன்பெல்லாம் பணத்தேவை என்றால் ஒருவரிடம் கடன் வாங்குவார்கள். ஆனால், இப்போது கிரெடிட் கார்டை பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுவும் அதே வட்டியுடன் கடன் முறைதான். ஆனால், தனிநபருக்கு பதிலாக வங்கியிடம் வாங்குகிறோம்.
பொதுவாக வங்கிப்பணவர்த்தனையில் பெரிதும் கேள்விப்படும் வார்த்தைகள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு ஆகும். 16 இலக்க அட்டை எண், காலாவதி தேதிகள், பின் குறியீடுகள் என கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பொதுவாக ஒரே மாதிரியாக இருக்கும். எப்போதாவது இரண்டிற்கும் இடையே என்ன வித்தியாசம் என்று சிந்தித்துள்ளீர்களா? இரண்டிற்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.
டெபிட் கார்டு
நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது, உங்கள் வங்கி கணக்குடன் இணைத்த ஒரு கார்டு வழங்கப்படும். இந்த கார்டு தான் debit card எனப்படும். உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு செல்லாமல் ATM-ல் எடுத்து கொள்ளலாம். வங்கி கணக்கில் பணம் இல்லையெனில் பண பரிவர்த்தனை debit card மூலம் செய்ய முடியாது.
பயன்கள்:
- பணத்தை உடனடியாக ஏடிஎம் மையத்தில் இருந்து எடுப்பதற்கு டெபிட் கார்டு உதவியாக இருக்கும்.
- பணத்தை கையில் வைத்திருப்பதை விட வங்கி கணக்கில் வைத்து உபயோகிப்பதன் மூலம் திருட்டு பயமில்லாமல் இருக்கலாம்.
- டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) Pin நம்பரை வேறு ஒருவருக்கு கூறும் பட்சத்தில் Online மோசடியாளர்களால் பணம் திருடப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே Pin நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம்.
கிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டும் வங்கிகளில் இருந்து தான் பெறப்படுகிறது, கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கும். உதாரணத்திற்கு, உங்கள் கிரெடிட் கார்டில் ரூபாய் 50 ஆயிரம் இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த பணத்தை நீங்கள் எந்த தொகையும் செலுத்தாமல் உபயோகப்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த தொகையை நீங்கள் வங்கிக்கு மீண்டும் செலுத்தும் வரையில் குறிப்பிட்ட அளவு வட்டி கட்ட வேண்டும்.
பயன்கள் :
- கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏதாவது பொருள் வாங்கினால் அதை நீங்கள் மாதாந்திர தவணை மூலம் தொகையை திருப்பி செலுத்த முடியும். இந்த கார்டு மூலம் கேஷ் பேக், கிப்ட் வவுச்சர் போன்ற பலன்கள் கிடைக்கும்.
- இந்த கார்டு வைத்திருந்தால் உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும்.
- வங்கியில் நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் மதிப்பு குறைக்கப்படும்.
- கிரெடிட் கார்டு பயன்பாடு நிபந்தனைகள் குறித்து வங்கியில் தெளிவாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
கிரெடிட் கார்ட் இருக்கிறது என்று அளவுக்கதிகமாக செலவு செய்துவிட்டு, தேவையில்லாத கடனில் சிக்கிக்கொள்ளும் சூழலில் உங்களுக்கு நீங்களே உருவாக்கிக் கொள்ளவும் கூடாது.
ALSO READ | Phone Pay, G Pay யூஸ் பண்றீங்களா..? ப்ளீஸ் இதை படிங்க..!