2020 ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் பைஜூ ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் தம்பதியினர் 46-வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்களது ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 22 ஆயிரம் கோடி.
முன்னாள் கணக்கு வாத்தியாரான பைஜூ ரவீந்தரன் மற்றும் அவரது மனைவி திவ்யா கோகுல்நாத் இணைந்து 2011 ஆம் ஆண்டு ஆன்லைன் கல்வி சார்ந்த டெக் நிறுவனத்தை பைஜூஸ் எனும் பெயரில் துவங்கினர்.
Also Read: 16 ஆயிரம் சதுர அடி.. ரூ. 60 லட்சம் இபி பில்.. ரூ. 5 ஆயிரம் கோடியில் அனில் அம்பானியின் பிரமாண்ட வீடு!
தற்சமயம் பைஜூஸ் சேவையை இந்தியா முழுக்க 4 முதல் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் சுமார் 3 கோடி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை இதுவரை 6.4 கோடிக்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளது.
பைஜூஸ் முதலீட்டாளர்களில் பேஸ்புக்கின் மார்க் ஜூக்கர்பர்க், டென்சென்ட் மற்றும் டைகர் குளோபல் போன்ற பிரபலங்கள் இடம்பெற்று இருக்கின்றனனர்.