Sunday, November 27, 2022
Homeவர்த்தக செய்திகள்தமிழ்நாட்டில் பெரிய முதலீடு செய்ய பிரிட்டானியா திட்டம்!

தமிழ்நாட்டில் பெரிய முதலீடு செய்ய பிரிட்டானியா திட்டம்!

பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக தமிழகத்தில் உற்பத்தி ஆலையை கட்டமைக்க பிரிட்டானியா ரூ. 300 கோடி வரை முதலீடு செய்வதாக இருந்தது. தற்சமயம் இந்த தொகையை ரூ. 550 கோடி வரை முதலீடு செய்ய இருக்கிறது.

இதற்கென பிரிட்டானியா நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளுக்கான தேவை அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகம் சார்ந்த பணிகளை விரிவுப்படுத்த பிரிட்டானியா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Also Read: 16 ஆயிரம் சதுர அடி.. ரூ. 60 லட்சம் இபி பில்.. ரூ. 5 ஆயிரம் கோடியில் அனில் அம்பானியின் பிரமாண்ட வீடு!

“தமிழகத்தில் முதலீட்டு திட்டத்தை மாற்றியமைத்து இருக்கிறோம். இதனால் ஏற்கனவே திட்டமிட்ட ரூ. 300 கோடியை ரூ. 550 கோடியாக அதிகரித்து இருக்கிறோம். இதனால் தமிழ் நாட்டில் அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ. 550 கோடி முதலீடு செய்ய இருக்கிறோம்” என பிரிட்டானியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இந்த முதலீடு மூலம் தமிழகத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலைவாய்ப்புகளை பிரிட்டானியா உருவாக்க முடியும்.

- Advertisment -

Most Popular

Recent Comments