வார ராசிபலன் (2/4/2023 to 9/4/2023 ) :
வரும் 9-ந் தேதி வரையிலான ராசிபலன் என்னென்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.
மேஷம்
எதிர்கால எண்ணங்கள் நிறைவேறும். உடனிருப்பவர்களை பற்றிய தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். இறைசார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக பொறுப்புகள் குறையும். மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். இழுபறி விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். காணாமற்போன சில பொருட்களை பற்றிய விவரங்கள் கிடைக்கும். உயர்கல்வியில் உள்ள புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சிவபெருமானை வழிபட சிந்தையில் தெளிவு பிறக்கும்.
ரிஷபம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கலை மீதான ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் நன்மை ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆஞ்சநேயரை வழிபட வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
மிதுனம்
புதிய தன்னம்பிக்கை உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். சில செலவுகளின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சாதகமான முடிவு கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் பகைமையை தவிர்க்கலாம். சாதுரியமாக செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். முருகப்பெருமானை வழிபட செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும்.
கடகம்
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சந்திக்க நினைத்தவர்களை சந்திப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார ஒப்பந்தம் சாதகமாக அமையும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அம்பிகையை வழிபட சுபிட்சம் உண்டாகும்.
ALSO READ | பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு பெருமாள் ஆலயத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?
சிம்மம்
மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பழுதுகளை சீர் செய்வீர்கள். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். கற்பனை திறன் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனை தொடர்பான பணிகளில் சில விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். தட்சிணாமூர்த்தியை வழிபட கல்வியில் உயர்வு உண்டாகும்.
கன்னி
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். காது தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் அமையும். முருகனை வழிபட செய்கின்ற செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும்.
துலாம்
கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தக துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மாற்றமான சூழல் அமையும். மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். போட்டி, பொறாமைகள் குறையும். தேடல் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உபரி வருமானம் மேம்படும். மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெருமாளை வழிபட ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்
சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தீர்வு காண்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாய்ப்புகள் உண்டாகும். ஆதரவு மேம்படும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுமையான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். தற்பெருமை பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். மாரியம்மனை வழிபட முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். தன வரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனுகூலமாக செயல்படுவார்கள். பணி நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆராய்ச்சி சார்ந்த செயல்பாடுகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். பைரவரை வழிபட ஒத்துழைப்பு மேம்படும்.
மகரம்
இறை வழிபாடு சிந்தனைகள் அதிகரிக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் அதிகரிக்கும். கவனம் வேண்டும். மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும். எதிர்கால சேமிப்பு பற்றிய எண்ணங்கள் உண்டாகும். விநாயகரை வழிபட பிரச்சனைகள் குறையும்.
கும்பம்
ஆதாயம் உண்டாகும். மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். கௌரவ பொறுப்புகளின் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். தனவரவுகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். காளியம்மனை வழிபட புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். தனவரவுகள் கிடைக்கும். ஆதரவான சூழல் ஏற்படும். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில்களில் லாபம் மேம்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சரஸ்வதி தேவியை வழிபட சிந்தையில் மாற்றம் பிறக்கும்.