Thursday, June 1, 2023
HomeAstrologyமேஷம் முதல் மீனம் வரை..! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நடக்கப்போது…! பாருங்க..

மேஷம் முதல் மீனம் வரை..! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் நடக்கப்போது…! பாருங்க..

வார ராசிபலன் (6/3/2023 to 12/3/2023 ) :

இன்று முதல் வரும் 12-ந் தேதி வரையிலான வார ராசிபலன்களை கீழே காணலாம். இந்த வாரம் சந்திரன் சிம்மம், கன்னி மற்றும் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார். மேலும், வரும் 9-ந் தேதி புதன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதனால், இந்த வாரம் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.

மேஷம்:

கடன் பிரச்சனைகள் குறையும். ஆரோக்கிய கோளாறுகளை தெரிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். தம்பதிகள் இடையே நெருக்கம் அதிகரிக்கும். இலக்கிய துறைகளில் ஈடுபாடு ஏற்படும். தம்பதிகள் இடையே இருந்துவந்த கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் நிம்மதி ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட்டால் நன்மைகள் மேம்படும்.

ரிஷபம்

விவசாயிகளுக்கு நன்மையான வாரம். சிறு மற்றும் குறு வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படும். இயற்கை மருத்துவத்தில் ஆர்வம் உண்டாகும். புதிய மனை வாங்குவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையில் ஈடுபாடு ஏற்படும். பொருட்கள் மீது கவனம் வேண்டும். சிக்கலான விவகாரங்களில் அனுசரித்து நடக்க வேண்டும். மகாலட்சுமியை வழிபாடு செய்து வர மனக்கவலை தீரும்.

மிதுனம்

திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மார்க்கெட்டிங்கில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். மீடியா துறையில் வெற்றி கொள்வீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும். கால்நடை வளர்ப்பு பற்றிய சிந்தனைகள் உண்டாகும். இறை வழிபாடு சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்து வர மேன்மையும், ஆதரவும் கிடைக்கும்.

கடகம்

கணித துறைகளில் உள்ளோருக்கு முன்னேற்றம். எதிர்பாராத தனவரவு உண்டாகும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். திடீர் பயணம் செய்யும் சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினர் ஒத்துழைப்பு கிட்டும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சொந்தங்களுக்குள் இருந்த பிரச்சினைகள் தீரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சுரங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். லட்சுமி நாராயணரை வழிபாடு செய்து வர தடைகள் விலகும்.

சிம்மம்

அடுத்தவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அளிப்பது நன்மை. துறை சார்ந்த விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். திறமைகள் வெளிவரும் வாரமாக அமையும். கற்பித்தல் பணிகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்து விவகார சிக்கல் தீரும். மறைமுக எதிர்ப்புகளை புரிந்து கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆண்டாளை வழிபாடு செய்து வர முயற்சிகள் ஈடேறும்.

கன்னி

உங்கள் உடன் இருப்பவர்களை புரிந்து கொள்வீர்கள். தேவையற்ற விவாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். வெளிநாட்டு பயணம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பணி அழுத்தம் அதிகரிக்கும். சில காரணங்களால் உடல்சோர்வு உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அதிகரிக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். வாக்கு சாதுரியத்தால் நினைத்ததை நிறைவேற்றி கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலைகளை அறிந்து செயல்படுவீர்கள். சிவபெருமானை வழிபாடு செய்து வர சிரமங்கள் குறையும்.

துலாம்

சகோதர வழி ஒத்துழைப்பு கிட்டும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். பொருள் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். கவலைப்படாமல் சுதந்திரமாக செயல்படுவீர்கள். மேக்கப் தொழிலில் ஈடுபடுவோருக்கு லாபம் உண்டாகும். ரகசிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல் தீரும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சூரியனை வழிபாடு செய்து வர எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

விருச்சிகம்

புதிய வாகன யோகம் உண்டாகும். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும். அரசு வேலைகள் மீது ஆர்வம் உண்டாகும். காவல், ராணுவ வீரர்களுக்கு மகிழ்ச்சிகரமான வாரமாக அமையும். பணிகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். மனதில் புதுவித ஆசைகள் பிறக்கும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்கள் உத்வேகத்தை அளிப்பார்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கடிகள் நீங்கும் முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.. முருகப்பெருமானை வழிபாடு செய்து வர தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

தனுசு

தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேள்வி பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். பேராசையின்றி செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வேளாண்மை சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர விருப்பங்கள் நிறைவேறும்.

மகரம்

இந்த வாரம் அலைச்சல்கள் உண்டாகும். முடிந்துபோன சில பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். கட்டிடத் தொழிலாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நேர்மைக்கு தக்க அங்கீகாரங்கள் கிடைக்கும். மாணவர்கள் மனதில் இருந்த குழப்பம் தீரும். தனித்திறமைகளை வளர்த்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மருத்துவத் துறையினருக்கு முன்னேற்றம் உண்டாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு சிலருக்கு சாதகமாக அமையும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்து வர தடைகள் விலகும்.

கும்பம்

உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகுவார்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களால் நன்மை ஏற்படும். வீண் கோபம் கூடாது. அரசு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். அதை சாதகமாக அமைத்துக்கொண்டால் முன்னேறலாம். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பைரவரை வழிபாடு செய்து வர பக்குவம் அதிகரிக்கும்.

மீனம்

சிறிய வேலைகளில் கூட சிரமம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். இயந்திரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். உங்கள் நன்னடத்தை பலருக்கும் உங்கள் மீது நம்பிக்கையை உண்டாக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு அவப்பெயர் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களுடன் நெருடல் நேரிடலாம். மறைவான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். கன்னிமார்களை வழிபாடு செய்து வர முயற்சிகள் ஈடேறும்.

ALSO READ | பக்தர்களே.. மாசி மகம் என்றால் என்ன..? அப்படி என்னதான் சிறப்பு..?