Tuesday, January 31, 2023
HomeAstrologyஇன்றைய ராசிபலன் (7/1/2023): மேஷத்துக்கு தன்னம்பிக்கை... சிம்மத்துக்கு மதிப்பு.. அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி?

இன்றைய ராசிபலன் (7/1/2023): மேஷத்துக்கு தன்னம்பிக்கை… சிம்மத்துக்கு மதிப்பு.. அப்போ உங்களுக்கு இந்த நாள் எப்படி?

மேஷம்:

உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.

மிதுனம்:

பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களின் கருத்துக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். நட்பு நிறைந்த நாள்.

கடகம்:

உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.

சிம்மம்:

வியாபாரப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குழந்தைகள் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் விலகும். போட்டிகள் நிறைந்த நாள்.

கன்னி:

சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். நெருக்கமானவர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.

துலாம்:

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் திருப்தி உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.

விருச்சிகம்:

எதிர்பார்த்த சில வரவுகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் தோன்றி மறையும். நெருக்கடியான சூழ்நிலையால் வருத்தம் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களால் விரயங்கள் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுமை வேண்டிய நாள்

தனுசு:

இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மாற்றம் நிறைந்த நாள்.

மகரம்:

உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.

கும்பம்:

குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

மீனம்:

அரசு தொடர்பான பணிகளில் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் உண்டாகும். வீடு, மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்தவற்றை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments