இன்றைய ராசிபலன் (05/04/2023):
இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே காணலாம்.
மேஷம்
குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய அனுபவம் கிடைக்கும். ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். மாற்றம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
ஆதாயம் ஏற்படும். ஆர்வம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். கவனம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புரிதல் உண்டாகும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
மிதுனம்
மேன்மை ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தெளிவு ஏற்படும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய வீடு வாங்கும் எண்ணங்கள் ஏற்படும். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அரசு பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். அனுகூலம் நிறைந்த நாள்.
கடகம்
புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் மாற்றம் ஏற்படும். சொத்து பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். ஒத்துழைப்பு மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பிரச்சனைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.
சிம்மம்
கலகலப்பான சூழல்கள் உண்டாகும். எண்ணங்கள் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வரவு உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.
ALSO READ | பங்குனி வளர்பிறை ஏகாதசிக்கு பெருமாள் ஆலயத்திற்கு ஏன் செல்ல வேண்டும்?
கன்னி
மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சமையல் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.
துலாம்
இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் ஒருவிதமான போராட்டங்கள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். முயற்சிகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பயணங்களால் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். புனித யாத்திரை செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். ஊக்கம் வேண்டிய நாள்.
தனுசு
திறமைகள் வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குழப்பங்கள் விலகும். உடை அணியும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் ஏற்படும். உறவினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.
மகரம்
புதிய தெளிவை உண்டாக்கும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். விருப்பம் ஈடேறும் நாள்.
கும்பம்
அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
எண்ணங்கள் கைகூடும். ரகசியமான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வருவாயை மேம்படுத்தும் சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிவீர்கள். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொது மக்கள் பணியில் ஆதாயம் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆதரவு நிறைந்த நாள்.