மேஷம்
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். சமூக பணிகளில் அனுசரித்து செல்லவும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிரீதி நிறைந்த நாள்.
ரிஷபம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களால் நிம்மதி ஏற்படும். செலவுகள் உண்டாகும் நாள்.
மிதுனம்
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். அனுபவம் மேம்படும் நாள்.
கடகம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதிய நபர்களால் குழப்பம் ஏற்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
சிம்மம்
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். செல்லப்பிராணிகளிடம் கவனத்துடன் இருக்கவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் குறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் உண்டாகும்.
கன்னி
தம்பதியர்களுக்குள் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
ALSO READ | சொந்த வீடு பாக்கியத்தை தரும் செவ்வாய் விரதம்..! பக்தர்களே இதைப்படிங்க..!
துலாம்
வியாபார பணிகளில் துரிதமாக செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் விவேகத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
விருச்சிகம்
புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுகமான போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
தனுசு
புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் ஏற்படும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பணிகளில் அலட்சியமின்றி செயல்படவும்.
மகரம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.
கும்பம்
புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். வாக்கு சாதுரியத்தால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மையான நாள்.
மீனம்
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். இழுபறியான காரியங்கள் நிறைவு பெறும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.