Thursday, June 1, 2023
HomeAstrologyராசிபலன் (3/3/2023): இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையப்போது..? கட்டம் சொல்வது என்ன?

ராசிபலன் (3/3/2023): இந்த நாள் உங்களுக்கு எப்படி அமையப்போது..? கட்டம் சொல்வது என்ன?

மேஷம்

வாழ்க்கை துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். தனவரவு சுமாராக இருக்கும். மற்றவர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை தவிர்க்கவும். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். லாபம் நிறைந்த நாள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். வெளிப்படையான பேச்சுக்களால் புதிய நபர்களின் அறிமுகமும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆக்கம் நிறைந்த நாள்.

கடகம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சேமிப்பது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

சிம்மம்

தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

கன்னி

மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.

துலாம்

நெருக்கமானவர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதிய முயற்சிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.

விருச்சிகம்

வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பொறுமை வேண்டிய நாள்.

தனுசு

மனதில் சிறு சிறு குழப்பம் ஏற்படும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்தியோக பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புரிதல் நிறைந்த நாள்.

மகரம்

வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். தனம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். தடங்கல் குறையும் நாள்.

கும்பம்

உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.

மீனம்

ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

ALSO READ | லேப்டாப் நீண்ட நாள் உழைக்கனுமா…? இனிமே இதை ஃபாலோ பண்ணுங்க..!